Skip to main content

களியக்காவிளை எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு... 5 பேர் உபா சட்டத்தின் கீழ் கைது!

Published on 20/01/2020 | Edited on 20/01/2020

களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளுடன் தொடர்புடைய தென்காசியை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது உபா சட்டம் பாய்ந்துள்ளது.

குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் கடந்த ஜனவரி 8ம் தேதி பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் மர்ம நபர்களால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார்.

 

SI WILSON CASE...

 

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் ஒரு தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரியவந்தது.

இதையடுத்து தமிழக மற்றும் கேரள போலீசார் இணைந்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இதனிடையே கடந்த 15ம் தேதி கர்நாடக மாநிலம் உடுப்பியில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான அப்துல் சமீம் மற்றும் தவ்பீக்  ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே இவர்களோடு தொடர்புடைய பல்வேறு நபர்களை போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

குறிப்பாக இவர்களது செல்போன்கள் கண்காணிக்கப்பட்டு அவர்கள் போலீஸின் பிடியில் கொண்டுவரப்பட்டனர். இதன்படி 10க்கும் மேற்பட்டோர் சிறப்பு படையினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதில் தென்காசியை சேர்ந்த முகமது சக்கரியா, அப்துல்காதர் நெல்லை பேட்டையை சேர்ந்த அல்ஹபீப், மேலப்பாளையத்தை சேர்ந்த முகமது இஸ்மாயில், செய்யது காஜா கரீம் நவாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது பிரிவு 7(1) (A) CLA ACTபடி வழக்கு பதிவு செய்யப்பட்டு பாளை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் மீது இன்று உபா சட்டம் தொடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அனைவரும் தென்காசி சேர்ந்தவர்கள் என்றபோதிலும் இவர்கள் ஏற்கனவே வேறு சில சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்பதால் வெவ்வேறு ஊர்களில் வசித்து வந்தனர்.

இருந்த போதிலும் தீவிரவாத அமைப்புகளுடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்ததால் அவ்வப்போது போலீசார் கண்காணித்து வந்தனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்