Skip to main content

கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

Published on 21/01/2022 | Edited on 21/01/2022

 

kl;

 

கரோனா பரவல் காரணமாக போடப்பட்ட ஊரடங்கால் கல்லூரிகள் பல மாதங்கள் திறக்கப்படாமல் இருந்தன. வகுப்புகளும் தேர்வுகளும் இணையதளம் மூலம் நடந்தன. இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்துவருகின்றன. அதேபோல் தேர்வுகள் அனைத்தும் நேரடியாகவே நடைபெறும் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், கரோனா மூன்றாம் அலை இந்தியா முழுவதும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. தமிழகத்திலும் பாதிப்பு எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. 

 

இதன் காரணமாக பள்ளி ,கல்லூரி மாணவர்களுக்கு வரும் 31ம் தேதிவரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் வரும் 1ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும், இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு நேரடித் தேர்வு நடைபெறும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கரோனா பரவல் காரணமாக மீண்டும் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட இருப்பதாக அமைச்சர் பொன்முடி விளக்கமளித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்