அண்மையில் கடலூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசுகையில், 'தமிழ் ஒரு சனியன்' என பெரியார் பேசியதாக தெரிவித்திருந்தார். மேலும் 'பெரியாருக்கும் சீர்திருந்திற்கும் என்ன சம்பந்தம்' என பேசியிருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசியதாக தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை நீலாங்கரை பகுதியிலுள்ள சீமானின் வீட்டை தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் பல இடங்களில் சீமானுக்கு எதிராக பெரியாரிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தி.க மற்றும் திமுகவினரின் புகாரில் தமிழகத்தில் 60 இடங்களில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திமுகவின் துரைமுருகனும் சீமானை மறைமுகமாக கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “இந்துத்துவாவாதிகள் பெரியார் எதிர்ப்பு பிரச்சாரத்தை பிரித்துக் கொடுத்துள்ளார்கள். அவர்களின் வேலைப்பிரிவினை மாநிலங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு கிழவனை இங்கு எதிர்கொள்வதால் அவர்கள் பதட்டமடைகிறார்கள். எனவே தான் சிங்கத்தை வீழ்த்த எலிப்பொறிகளை தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள்.