Skip to main content

சக பெண் ஊழியரைக் குத்திக் கொன்ற இளைஞர்; வெளியான அதிர்ச்சி தகவல்!

Published on 09/01/2025 | Edited on 09/01/2025
A youth who stabbed a female colleague in pune

சக பெண் ஊழியரை, கம்பெனி பார்க்கில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புனே மாநிலத்தைச் சேர்ந்த சுபதா கோதாரே(28), எரவாடாவில் உள்ள குளோபல் பிசினஸ் பிராசஸ் அவுட்சோர்சிங் என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர், தனது நிறுவனத்தின் கணக்காளராக வேலை பார்க்கும் கிருஷ்ணா கனோஜா (30) என்பவரிடம், தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லி அடிக்கடி பணம் வாங்கியுள்ளார். 

கிருஷ்ணா, சுபதா கோதாரேவிடம் ஒவ்வொரு முறையும் பணத்தை திரும்ப கேட்கும்போதும், அவர் தனது தந்தையின் நிலையைக் காரணம் காட்டி பணத்தை திரும்ப கொடுக்க மறுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் மனமுடைந்த கிருஷ்ணா, சுபதா கோதாரேவின் ஊருக்குச் சென்று, அவரைப் பற்றி விசாரித்துள்ளார். மேலும் அவர், அந்த பெண்ணின் தந்தை நலமாக இருப்பதையும், உடல்நிலக் குறைப்பாடு எதுவும் இல்லாமல் இருப்பதையும் கண்டுள்ளார். 

இதையடுத்து, நேற்று முன்தினம் கனோஜா கோதாரேவை அலுவலகத்தின் வாகன நிறுத்துமிடத்திற்கு அழைத்துச் சென்று கிருஷ்ணா பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். சுபதா பணத்தை தர மறுத்ததால், இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுபாதாவை சரமாரியாக குத்தினார். இதில், படுகாயமடைந்த சுபாதா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து மயங்கி விழுந்தார். 

இதனை தொடர்ந்து, அவர் மீட்கப்பட்டு அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுபாதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து, கிருஷ்ணா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்