/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/investigation_12.jpg)
கிருஷ்ணகிரியில் சம்பள பிரச்சனையில் ஹோட்டல் உரிமையாளரை, ஊழியர் ஒருவர் ஹெல்மெட்டால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சுண்டகிரி பகுதியில் சரவணபவன்ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் மேலாளராக பணிபுரிந்து வந்தவர் பாலமுருகன். இதனிடையே, இந்த ஹோட்டலில் சப்ளையராக பழனி என்பவர் சில நாட்களுக்கு முன் வேலை பார்த்து வந்தார். இதனையடுத்து பழனி, சம்பள பிரச்சனையால் அந்த வேலையை விட்டு நின்றுள்ளார்.
இந்த நிலையில், வேலை பார்த்து வந்த நாள் வரைக்குமான சம்பளத்தை கேட்பதற்காக பழனி அந்த ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது, அவர் பாலமுருகனிடம் மீதி சம்பளத்தை கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட இந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் தகராறாக மாறியுள்ளது. இதில் பாலமுருகன்,பழனியின் கன்னத்தில்அறைந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பழனிதான் கொண்டு வந்த ஹெல்மெட்டை வைத்து மேலாளர் பாலமுருகனை அடித்ததாகக் கூறப்படுகிறது.
இதில் மயக்கமடைந்த பாலமுருகன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)