Skip to main content

44 இராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பது தாங்கொணாத் துயரம்! - சீமான் இரங்கல்  

Published on 16/02/2019 | Edited on 16/02/2019
CRPF j&k



நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
 

ஸ்ரீநகர், புல்வாமாவில் நடைபெற்ற கொடூரத்தாக்குதலில் 44 இராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பது தாங்கொணாத் துயரத்தைத் தருகிறது. அதில் தமிழர்கள் இருவர் என்பதையறிந்து பெரும் மனவேதனையடைந்தேன். உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவர்களது துயரத்தில் முழுமையாகப் பங்கெடுக்கிறேன்.
 

350 கிலோ எடைகொண்ட வெடிகுண்டோடு இராணுவத்தினர் மத்தியில் ஊடுருவி அவர்களைத் தாக்கி அழிக்கிற அளவுக்குத்தான் இராணுவ வீரர்களின் பாதுகாப்பு இருக்கிறது என்கிறபோதே நாட்டையாளும் மோடி அரசின் அலட்சியமும், நிர்வாகச் சீர்கேடுமே இத்தனை உயிர்களுக்கு உலை வைத்திருக்கிறது என்பதைத் தெளிவுப்படுத்துகிறது. தேர்தல் நெருக்கத்தில் நிகழ்ந்திருக்கிற இக்கோரச் சம்பவமானது பல்வேறு யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் வித்திடுகிறது.
 

இனியேனும் இது போன்ற பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறாமலிருக்க மிகுந்த கவனத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தீவிரவாதிகள் தாக்குதல்; ஜம்மு - காஷ்மீரில் பதற்றம்!

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
Jammu and Kashmir Doda District incident

ஜம்மு - காஷ்மீரில் உள்ள தோடா மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் அங்குப் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. நேற்று (12.06.2024) இரவு 08.20 மணியளவில், கோட்டா டாப், காண்டோ, தோடாவில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் நடைபெற்றது. இந்த மோதலில் பாதுகாப்புப்படையினர் 5 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக அரசு மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் மருத்துவர் தன்வீர் கூறுகையில், “பாதுகாப்புப் படையினருக்குத் துப்பாக்கி குண்டு பட்டதால் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் உடல்நிலை நிலையாக உள்ளார். மார்பு மற்றும் காலில் குண்டுக் காயம் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். அதே சமயம் இந்த சம்பவத்தில் காயமடைந்த எஸ்.ஓ.ஜி. கான்ஸ்டபிள் பரீத் அகமது மேல் சிகிச்சைக்காகத் தோடா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த மோதலுக்குப் பிறகு தோடாவின் தாத்ரி பகுதியில் போலீஸ் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டு வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. 

Jammu and Kashmir Doda District incident

ஜம்மு காஷ்மீரில் ஏற்கனவே ரீசி மற்றும் கத்துவா பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் கடந்த 1 வாரத்தில் 4 முறை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதால் அங்குப் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கத்துவா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தி இருந்தனர். பிரதமர் மோடி 3 முறையாகப் பிரமராகப் பதவியேற்ற கடந்த 9 ஆம் தேதி ஜம்மு - காஷ்மீரில் உள்ள சிவகோண்டா கோயிலில் தரிசனம் செய்துவிட்டு ரியாசி பகுதியில் பயணிகளுடன் கொண்டிருந்த மினி பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.  இதில்10 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் பதேர்வா, தாத்ரி மற்றும் காண்டோவின் மேல் பகுதிகளில் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நான்கு பயங்கரவாதிகளின் படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். இவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்குத்  தலா 5 லட்சம் வீதம் 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என ஜம்மு - காஷ்மீர் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். அதே சமயம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் வலியுறுத்தியுள்ளனர். 

Next Story

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்; காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம்!

Published on 09/06/2024 | Edited on 09/06/2024
jammu and kashmi reasi bus incident Congress leaders strongly condemned

ஜம்மு - காஷ்மீரில் உள்ள சிவகோண்டா கோயிலில் தரிசனம் செய்துவிட்டு ரியாசி பகுதியில் பயணிகளுடன் மினி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் பயணிகள் பலர் பயணம் செய்துள்ளனர். அப்போது பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.  இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பேருந்து தடுமாறி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ராகுல் காந்தி தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள சிவகோடி கோவிலில் இருந்து பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதல் மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த வெட்கக்கேடான சம்பவம், ஜம்மு காஷ்மீரின் கவலைக்கிடமான பாதுகாப்பு நிலைமையின் உண்மையான எடுத்துக்காட்டு படம் இது. இந்த விபத்தில் சிக்கி இறந்தவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

jammu and kashmi reasi bus incident Congress leaders strongly condemned

மேலும் இது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அரசு பதவிப் பிரமாணம் செய்து கொண்டும், பல நாடுகளின் தலைவர்கள் நாட்டில் இருக்கும் போது கூட, பக்தர் களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் 10 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசும், அதிகாரிகளும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.

மூன்று வாரங்களுக்கு முன்பு, பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, மேலும் ஜம்மு & காஷ்மீரில் பல பயங்கரவாத சம்பவங்கள் தடையின்றி தொடர்கின்றன. மோடி (இப்போது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு) அரசாங்கத்தால் அமைதி மற்றும் இயல்புநிலையை கொண்டு வருவதற்கான அனைத்து பிரசாரங்களும் வெற்றுத்தனமாக ஒலிக்கின்றன. பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.