Skip to main content

அரசால் வீடிழந்து நிற்கும் கள்ளிக்குப்பம் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்

Published on 16/10/2018 | Edited on 16/10/2018


 

Seeman



அரசால் வீடிழந்து நிற்கும் கள்ளிக்குப்பம் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.

அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகக் கூறி மின்சாரம், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்டவற்றிற்கு அரசின் அனுமதிபெற்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை - கள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள குடியிருப்புகளை, கடந்த 12-10-2018 அன்று தமிழக அரசு, மாற்று ஏற்பாடுகள் ஏதுமின்றி அவசர அவசரமாக அனைத்து வீடுகளையும் இடித்து தரைமட்டமாக்கியது. 
 

வீடிழந்த நிலையில் இருக்க இடமின்றி ஆதரவற்று துயருற்று நிற்கும் அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நாளை 16-10-2018 செவ்வாய்க்கிழமை மாலை 03 மணியளவில் அம்பத்தூர் உழவர் சந்தை அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருகின்றது. 

 

இதில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சசிகலா ஜெயராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆ.ப.இப்ராஹீம், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பா.கிரிபாபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா - லெ விடுதலை) சார்பில் இர.மோகன் ஆகியோர் பங்கேற்று அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்