அண்ணியுடன் கூடா நட்பு வைத்திருந்த இன்ஜினியரை இரும்பு ராடால் அடித்து கொலை செய்திருக்கிறார் வாலிபர் ஒருவர்.
சென்னை அண்ணாநகரில் பாரதிராஜா என்பவர் தனது அண்ணனுடன் வசித்து வந்துள்ளார். அவரது அண்ணன் வாகன உதிரிபாகம் கடை நடத்தி வருகிறார். பாரதிராஜா அந்த கடையில் உதவியாக இருந்து வந்தார். அண்ணனுக்கு திருமணம் ஆன உடன் பாரதிராஜா, தனது நண்பரான ரங்கநாதனுடன் பாடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
விடுமுறை நாட்களில் ரங்கநாதனை தனது அண்ணன் வீட்டுக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார் பாரதிராஜா. இதனால் ரங்கநாதனுக்கு அந்த குடும்பத்துடன் நல்ல பழக்கம் ஏற்பட்டள்ளது. நாளடைவில் பாரதிராஜாவின் அண்ணியை ரங்கராஜன் தனிமையில் சந்தித்துள்ளார். இது கூடா நட்பாக மாறியது. இந்த சந்திப்பு பாராதிராஜாவின் அண்ணியின் வீட்டிலேயே நடந்திருக்கிறது.
இதனை அக்கம் பக்கத்தினர் பாரதிராஜாவிடம் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த பாரதிராஜா, ''நானும் எனது அண்ணனும் இல்லாத நேரத்தில் ஏன் வீட்டுக்கு செல்கிறாய். இந்த விஷயம் எனது அண்ணனுக்கு தெரிந்தால் பிரச்சனை ஏற்படும்'' என்று கூறியுள்ளார்.
''ரங்கநாதனை ஏன் வரசொன்னீங்கன்னு உங்க அண்ணியை போய் கேளு... நான் போகக்கூடாதுன்னு சொல்லாதே'' என்று கூறியிருக்கிறார் ரங்கநாதன். கடந்த இரண்டு மாதமாக இதேபோல் இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை தனது அண்ணியை அவரது வீட்டில் ரங்கநாதன் தனிமையில் சந்தித்தது பாராதிராஜாவுக்கு தெரிய வந்தது. அன்று மதியம் மது அருந்திய பாரதிராஜா, பாடியில் தங்கியுள்ள அறைக்கு சென்றுள்ளார். அங்கு ரங்கநாதன் உறங்கிக்கொண்டிருந்தபோது, இரும்புராடால் அடித்து கொலை செய்திருக்கிறார்.
ரங்கநாதன் கீழே விழுந்து இறந்ததுபோல் ஏற்பாடு செய்துவிட்டு, அங்கியிருந்து தப்பியுள்ளார். ரங்கநாதன் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் சொல்லியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த ஜெ.ஜெ.நகர் காவல்நிலைய போலீசார், கொலையுண்ட ரங்கநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பரிசோதனை முடிவில் ரங்கநாதன் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று உறுதியானதால் பாரதிராஜா கைது செய்யப்பட்டார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மதுரையைச் சேர்ந்த 30 வயதான ரங்கநாதன் தாம்பரத்தில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.