Skip to main content

விவசாயி சேமிப்பு கணக்கில் இருந்து நூதனமாக பணம் திருடிய எஸ்.பி.ஐ வங்கி மேலாளர்!

Published on 19/06/2018 | Edited on 19/06/2018
BA


சென்னை மணலி அருகே விவசாயி சேமிப்பு கணக்கில் இருந்து வங்கி துணை மேலாளரே ரூ.5 லட்சம் பணம் திருடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விச்சூரை சேர்ந்தவர் விவசாயி ரவீந்திரநாத். இவர் கடந்த ஆண்டு மணலி புது நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு தொடங்கியுள்ளார். தனது வருமானத்தை அந்த கணக்கில் சேமித்து வந்த ரவீந்திர நாத், நேற்று பணம் எடுப்பதற்கு வங்கிக்கு சென்றார். ஆனால் அவருடைய கணக்கில் கடந்த மே மாதத்தில் ஆறு முறை மொத்தம் ரூ. 5 லட்சம் எடுத்ததாக பதிவாகி இருந்தது. இதில் அதிர்ச்சியடைந்த ரவீந்திரநாத் வங்கி மேலாளரிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தார்.

ஆனால் வங்கி மேலாளர் அதற்கு உரிய பதில் அளிக்கவில்லை. இதையடுத்து பதரிபோன ரவீந்திரநாத் சம்பவம் குறித்து மணலி புதுநகர் காவல் நிலையத்தில் கடந்த 13ம் தேதி புகார் அளித்தார். இதை தொடர்ந்து, வங்கி மேலாளரிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், துணை மேலாளர் சிகாமணி மற்றும் உதவியாளர் சுரேஷ் ஆகியோர் பணத்தை கையாடல் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட வங்கி துணை மேலாளர் மற்றும் உதவியாளரிடம் இது போல் வேறு யார் வங்கி கணக்கில் இருந்தும் பணம் கொள்ளை செய்துள்ளனரா என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்