tied the mother to a pole as the romantic couple left the house

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் அரேமல்லாபுர கிராமத்தைச் சேர்ந்தவர் அனுமவ்வா. இவரது மகன் மஞ்சுநாத். இருவரும் தனியாக வசித்து வரும் நிலையில் மகன் மஞ்சுநாத் அதே கிராமத்தில்வசிக்கும் வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் மஞ்சுநாத்தும் அந்தப் பெண்ணும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இந்தத் தகவல்பெண்ணின் தந்தை சந்திரப்பாவுக்கு தெரிய வர உடனடியாக தனது உறவினர்களுடன் அனுமவ்வாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தகராறில் ஈடுபட்ட சந்திரப்பா அனுமவ்வா வை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளார். பின்பு அங்குள்ள மின்கம்பத்தில் அனுமவ்வாவைக் கட்டி வைத்து சந்திரப்பா மற்றும் அவரது உறவினர்கள் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

இதனைத் தொடர்ந்து அப்பகுதிமக்கள் அனுமவ்வாவை மீட்டு மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து அனுமவ்வா குடுபத்தார் சந்திரப்பா மீது புகார் கொடுக்க, பதிலுக்கு தன் மகளை மஞ்சுநாத் கடத்தியதாக சந்திரப்பாவும் புகார் கொடுத்துள்ளார். இந்த இரு புகார்களை பதிவு செய்துகொண்ட போலீசார், தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடயே, அனுமவ்வா மின் கம்பத்தில் கட்டிவைத்து தாக்கப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அனுமவ்வாவை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட எஸ்பி அஞ்சுக்குமார் உத்தரவு பிரபித்தார். அதன்பேரில் சந்திரப்பா மற்றும் அவரது உறவினர்கள் மூன்று பேரையும் கைது செய்துபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment