Published on 02/06/2021 | Edited on 02/06/2021
![Sand smuggling in two-wheelers - 4 arrested](http://image.nakkheeran.in/cdn/farfuture/KZSGhpxnFPeomrgzkP1gX839fjFF4c3f2g1uTYuVFH4/1622612803/sites/default/files/inline-images/sand-robbery.jpg)
திருச்சி மாவட்டம் கல்லக்குடி பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றுப்படுகையில், தொடர்ந்து சாக்கு மூட்டைகளில் மணல் கடத்தப்படுவதாக புகார் எழுந்த நிலையில், காவல்துறையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில், கல்லக்குடி பகுதியில் வாகன தணிக்கையில் காவலர்கள் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனங்களில் சாக்குப்பைகளில் மணல் திருடிச் சென்ற 4 பேரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனா். அதில் குலமாணிக்கம் பகுதியைச் சேர்ந்த கணேசன், சந்திரகுமார், நத்தமாங்குடி பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன், கனகராஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவுசெய்தனா்.