அரசுப் பள்ளிகளில் பள்ளி மாணவர்களாலேயே பள்ளியின் கழிவறை தூய்மைப்படுத்தப்படுவது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து அது தொடர்பான புகார்களும் எழுதுகிறது. இந்நிலையில் அதேபோல் சேலத்தில் பள்ளி மாணவன் ஒருவர் தரையில் அமர்ந்தபடி ஆசிரியரின் கால்களை பிடித்து விடும் வீடியோ காட்சி தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல் பகுதியில் உள்ளது கிழக்கு ராஜபாளையம். இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜெயபிரகாஷ். இவர் வகுப்பு இல்லாத நேரத்தில் மாணவர்களை கூப்பிட்டு காலை அமுக்கி விடு சொல்வதாக மாணவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஆசிரியர் ஜெயபிரகாஷ் இருக்கையில் அமர்ந்திருக்க கீழே இருபுறமும் தரையில் அமர்ந்திருந்த இரண்டு மாணவர்கள் கால்களை அழுத்தி விடும் வீடியோ காட்சி ஒன்று வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல் முறையாக பாடம் எடுக்காமல் அடிக்கடி வகுப்பறையிலேயே ஆசிரியர் ஜெயபிரகாஷ் தூங்கும் காட்சிகளும் வெளியாகியாது.
இந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்த நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஜெயப்பிரகாஷை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உத்தரவிட்டுள்ளார்.