Published on 10/05/2023 | Edited on 10/05/2023

சேலம் மாநகராட்சி 44வது கோட்டத்தில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வரும் பெண் ஒருவரை சுகாதார ஆய்வாளர் சித்தேஸ்வரன் ஆபாசமாகத் திட்டியதாகவும் அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அதனால் அப்பெண் தற்கொலைக்கு முயன்றதாகவும் புகார்கள் கிளம்பின.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ், மாநகர நல அலுவலர் யோகானந்த் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, சுகாதார ஆய்வாளர் சித்தேஸ்வரனை பணியிடைநீக்கம் செய்து ஆணையர் மே 8ம் தேதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மாநகராட்சி தரப்பில் கேட்டபோது, நிர்வாகக் காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.