ஒவ்வொரு ஆண்டும் நுண்ணுயிர் நோய் தொற்று காரணத்தால் உலகம் முழுவதும் பலஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டு பலியாகி வருகிறார்கள். இதை கட்டுப்படுத்தும் விதத்தில் உலக சுகாதார நிறுவனத்தால் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 15 ஆம் தேதி உலக கை கழுவும் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு சேலம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கையின் பெயரில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் திட்ட இயக்குனர் அருள்ஜோதிஅரசன் ஒருங்கிணைப்பில் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி உலக கை கழுவும் நாள் தினம் அன்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கின்னஸ் சாதனை நிகழ்த்தும் முயச்சியில் கின்னஸ் சாதனை நிறுவனத்திற்கு தகவல் கொடுத்து அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் அங்கன் வாடி மாணவர்கள் என அனைவரையும் ஒருங்கினைத்து நடத்தப்பட்ட கை கழுவும் நிகழ்ச்சியை ஒன்பது கேமராக்கள் மற்றும் இரண்டு ஜிம்மிஜிக்கி கேமரா செட்டப் மேலும் கிரேன் கேமரா உதவியுடன் ஒரே நேரத்தில் கை கழுவும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
மேலும் மாவட்டம் முழுவது 4024 பேர் இதில் பங்கு பெற்று விழிப்புணர்வு ஏற்படுத்தியதை அங்கீகரித்த கின்னஸ் சாதனை நிறுவனம் ஏற்றுக்கொண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவு செய்து அங்கிகரித்து அதற்கான கின்னஸ் சாதனை சான்றிதழையும் வழங்கி கவுரவித்தது. கடந்த வியாழன் அன்று அரசு விழாவில் மாவட்ட ஆட்சியர் ரோகினி மற்றும் மாவட்ட திட்ட இயக்குனர் அருள்ஜோதிஅரசன் மற்றும் ஊரகவளர்ச்சி துறையினரை முதல்வர் எடபாடி பழனிசாமி பாராட்டினார்.