கரூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 40 உறுப்பு கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தான்தோன்றிமலையில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரி அரங்கில் பல்கலைக்கழக அளவிலான டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளை சேர்ந்த கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட அரசு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
40 கல்லூரிகளில் இருந்து வந்த மாணவ, மாணவிகள் பங்கேற்ற இப்போட்டி 46 கிலோ தொடங்கி, 90 கிலோ வரையிலான எடைப்பிரிவில் 8 ஆண்கள் பிரிவு, 8 பெண்கள் பிரிவு என தனித்தனியாக நடைபெற்றது. போட்டிக்கான ஏற்பாடுகளை கரூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் கௌசல்யாதேவி மற்றும் உடற்கல்வி துறை இயக்குநர் ராஜேந்திரன் செய்திருந்தனர்.
போட்டியில் வெற்றி பெற்று மாணவ, மாணவிகளுக்கு மெடல் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.