![Robbery at Sub Inspector's house in Rajapalayam](http://image.nakkheeran.in/cdn/farfuture/-8MVB58HtV4n1WeZrEUpsxKl8EHL2QeTlWld5Q47rQ4/1676897199/sites/default/files/inline-images/998_55.jpg)
ராஜபாளையம் 11வது போலீஸ் பட்டாலியன் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார் கோமதிநாயக கண்ணன். ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜீவ்காந்தி நகரில் வசிக்கும் இவர், சிவராத்திரியை முன்னிட்டு குடும்பத்தினருடன் குலசாமியை வழிபட அருகிலுள்ள குன்னூர் சென்றார். மறுநாள் எதிர்வீட்டில் குடியிருப்பவர் கோமதிநாயக கண்ணனை செல்போனில் தொடர்புகொண்டு, “உங்க வீடு திறந்து கிடக்கு..” என்று தகவல் கூறியிருக்கிறார்.
உடனே கோமதிநாயக கண்ணன் வீட்டுக்கு கிளம்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டிற்குள் பெட்ரூம், பூஜை அறையில் இருந்த பொருட்கள் கலைந்து கிடப்பதும், 3 பீரோக்களில் இருந்த 30 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி பாத்திரங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
இதையடுத்து கோமதிநாயக கண்ணன் அளித்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுண் காவல்நிலையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.