Skip to main content

“வருவாய் ஆதாரங்கள் பாதிக்கப்படுகின்றன” - மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

Published on 12/01/2025 | Edited on 12/01/2025
Revenue sources are affected Chief Minister's letter to Union Minister

ராமநாதபுரம் மாவட்ட ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்த மீன்பிடிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்களை இன்று (12.01.2025)  இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும்,  வலுவான மற்றும் பயனுள்ள தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு  இன்று  கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், “இலங்கை கடற்படையினரால் நமது மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவகிறது. இன்று, ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற எட்டு தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அதோடு அவர்களது இரண்டு மீன்பிடி விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர் இலங்கை கடற்படையினரால் நமது மீனவர்கள் அடிக்கடி சிறைபிடிக்கப்படுவதால், மீனவ சமுதாயத்தினரிடையே அச்சத்தையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும்  அவர்களது பாரம்பரிய வாழ்வாதார வருவாய் ஆதாரங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம் நிரந்தர தீர்வு காண வேண்டியது அவசியம் ஆகும். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிப்பதை உறுதி செய்வதற்கு உரிய தூதரக வழிமுறைகள் மூலம் வலுவான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்