எதிர்கட்சிகள் பொறாமை காரணமாக தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்களை கூறி வருவதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
எலி காய்ச்சல் கால்நடைகள் பரவுவதை தடுக்க, கேரளாவிற்கு கால் நடைகளுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி மருத்துகள் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக கேரள எல்லை பகுதிகளில் கால்நடை மருத்துவ குழு மூலம் சோதனைகள் செய்து வருகிறோம். எலிகாய்ச்சல் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக கேரள எல்லையில் கால்நடைகளுக்கு எலி காய்ச்சல் பாதிப்பு எதுவும் இல்லை. கால் நடைகளை வைத்து இருப்போர் சுகாதர முறையில் வைத்து இருக்க வேண்டும். தமிழகத்திற்குள் வரும் கால்நடைகளை பரிசோதனை செய்ய மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளன என்றார்.
அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மீதான ஊழல் புகார் தொடர்பாக கேள்விக்கு, சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என பதிலளித்தார். மேலும் ஒவ்வொரு துறை அமைச்சரும் சிறப்பாக செயலாற்றி வருகிறார்கள் எனவும், எதிர்கட்சிகள் பொறாமை காரணமாக ஊழல் புகார்களை கூறி வருவதாக உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.