Skip to main content

சிறார் ஆபாசப்பட பதிவேற்றம்... போக்சோவில் இருவர் கைது!

Published on 09/03/2020 | Edited on 09/03/2020

ரூ.50- க்கு பென் டிரைவ்களிலும், மெமரி கார்டுகளிலும் தன்டனைக்குரியக் குற்றமான சிறார் ஆபாசப்படங்களை பதிவேற்றம் செய்து கொடுத்த இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது ராமநாதபுர மாவட்ட காவல்துறை.

ramanathapuram district police pocso act two persons arrested

ராமநாதபுரம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராக வருண்குமார் பொறுப்பேற்ற பிறகு 9489919722 எனும் பிரத்யேக மொபைல் எண்ணை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினர். இந்த மொபைல் எண்ணிற்கு மாவட்டத்தின் பல இடங்களிலிருந்து வரும் தகவல்கள், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளருக்கு சென்றடைய அன்றே அது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குற்றங்கள் களையப்பட்டு வருகின்றது. தகவலும், தகவல் அளித்தவரும் பாதுக்காக்கப்படுவதால் இந்த மொபைல் எண்ணிற்கு அதிகளவில் குற்றங்கள் தொடர்பான தகவல்கள் பரிமாறப்படுகின்றன.


இந்த வகையில் கமுதி தாலுகா பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களை குறிவைத்து பென் டிரைவ்களிலும், மெமரி கார்டுகளிலும் சிறார் உள்ளிட்ட ஆபாசப்படங்கள் பதிவேற்றம் செய்து தருவதாக 9489919722 எனும் பிரத்யேக எண்ணிற்கு தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் கமுதி காவல் நிலைய ஆய்வாளர் கஜேந்திரன், எஸ்.ஐ.முருக நாதன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து கமுதி வட்டாரத்திலுள்ள அனைத்து செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் மையங்களில் காவல்துறையினர் தீர விசாரித்ததில், கமுதி பேருந்து நிலையம் அருகிலுள்ள பழனியாண்டவர் செல்போன் மையத்தில் ரூ.50- க்கு பென் டிரைவ்களிலும், மெமரி கார்டுகளிலும் சிறார் ஆபாசப்படங்கள் பதிவேற்றம் செய்தது புலனாக, அம்மையத்தின் உரிமையாளரான கமுதி பொன்னிருள் மற்றும் அங்கு வேலைப்பார்த்த மேலராமநதி வழிவிட்டா கிழவன் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். 

 

சார்ந்த செய்திகள்