Skip to main content

"ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு"- நடிகர் ரஜினிகாந்த் அட்வைஸ்!

Published on 09/06/2020 | Edited on 09/06/2020

 

rajini makkal mandram statements actor rajinikanth


ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு என் தனது ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை கூறியுள்ளார்..

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "அடிபட்ட உடனேயே அதிக வலி தெரியாது. இப்போது நமக்குப் பட்டிருக்கும் கரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல, வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் பிசாசுத் தனமான அசுர அடி. இப்போதைக்கு இது தீராது போலத் தெரிகிறது. இதனுடைய வலி வருங்காலங்களில் பல விதங்களில் நமக்குப் பல கடுமையான வேதனைகளைத் தரும். 

rajini makkal mandram statements actor rajinikanth

கரோனா வைரஸ் தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இடைவிடாமல் உதவிகளைச் செய்துக் கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களது குடும்பத்தாரின் எல்லா தேவைகளையும் பூர்த்திச் செய்து அவர்களைப் பாதுகாப்பதுதான் உங்களது அடிப்படை கடமை. எந்தச் சூழலிலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், முகக்கவசத்தை அணியாமலும் இருக்காதீர்கள்." இவ்வாறு கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்