தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கடலோர மாவட்டங்களான புதுவை மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்” எனக் கூறப்பட்டுள்ளது. வெப்பநிலை 14 முதல் 25 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே கடுமையான வெயில் சென்னையில் இருக்க வாய்ப்பில்லை என்பதால் சென்னைவாசிகளுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியாகவே வானிலை மையத்தின் இந்த அறிவிப்பு இருக்கிறது.