Skip to main content

தொடரும் கோர விபத்துகள்-கோரிக்கை வைக்கும் திருமயம் மக்கள்

Published on 08/03/2025 | Edited on 08/03/2025
Continued fatal accidents - Thirumayam people make a request

திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை - திருமயம் இடையே அடிக்கடி கோர விபத்துக்கள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. சில மாதங்களில் பல கோர விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல இன்று (08/03/2025) காலை நமணசமுத்திரம் காவல் நிலையம் அருகே 2 கார்கள் ஒரு சரக்கு வாகனம் என மூன்று வாகனங்களும் அதிவேகத்தில் வந்து மோதிக் கொண்ட கோர விபத்தில் அருணா, செந்தமிழ் செல்வன், சுதாகர் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 குழந்தைகள், ஒரு பெண் உள்பட பலர் காயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், போலிசாரும் பொதுமக்களும் காயமடைந்தவர்களையும் உயிரிழந்தவர்களை மீட்டு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் திருமயம்-புதுக்கோட்டை இடையே நடக்கும் கோர விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கைகளை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அந்த பகுதி மக்களிடையே பலமாக எழுந்துள்ளது.

சார்ந்த செய்திகள்