Skip to main content

நல்லடக்கம் செய்யப்பட்ட லட்சுமி யானை - கதறி அழுத பாகன்

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

jkl

 

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்குக் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு 5 வயதில் லட்சுமி யானை வந்தது. புதுச்சேரியில் உள்ள பக்தர்களுக்கு மிகவும் நெருக்கமான யானையாக லட்சுமி இருந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மணக்குள விநாயகர் கோவிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் யானை லட்சுமியை தரிசிக்காமல் சென்றதில்லை.

 

இந்த நிலையில் இன்று காலை லட்சுமியின் இருப்பிடமான ஈஸ்வரன் கோயிலிலிருந்து நடைப்பயிற்சி சென்றது. அப்போது கல்வே கல்லூரி அருகே சென்றபோது மயங்கி விழுந்தது. சிறிது நேரத்தில் அங்கேயே உயிரிழந்தது. யானை லட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று கூறினார்கள்.

 

மக்களுக்கு மிகவும் நெருக்கமான லட்சுமி யானை உயிரிழந்தது புதுச்சேரி மக்கள் மட்டுமல்லாமல் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடற்கூறு பரிசோதனைக்குப் பிறகு சடங்குகள் நிகழ்த்திய பிறகு மாலையில் முத்தியால் பேட்டை பஜனை மட வீதி இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.  

 

இதனிடையே மணக்குள விநாயகர் கோயில் நடை சாத்தப்பட்டு யானை லட்சுமி பக்தர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவர் இறந்ததைப் போல யானை லட்சுமியை பார்த்து தழுவி மலர்கள் தூவி கதறி அழுதும் கண்ணீர் விட்டும் அஞ்சலி செலுத்தி வரும் காட்சி கல் நெஞ்சையும் கலங்க வைக்கிறது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குளியலால் குஷி மூடில் ஆண்டாள் கோவில் பெண் யானை!

Published on 12/06/2022 | Edited on 12/06/2022

 

Andal temple female elephant in Kushi Mood by bath!

 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பெண் யானை ஜெயமால்யதா பாகனால் துன்புறுத்தப்படுவதாக தகவலுடன் வீடியோ ஒன்று பரவிவரும் நிலையில், அந்த யானையைக் குளிப்பாட்டி குஷிப்படுத்திக் கொண்டிருந்தனர் பாகன்கள். கோடைகால வெப்பத்தைச் சமாளிப்பதற்கு, அந்த யானையை தினமும் குளிப்பாட்டி உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

 

கடந்த ஆண்டு, புத்துணர்ச்சி முகாமில் ஜெயமால்யதா யானை,  பாகனால்  அடித்து துன்புறுத்தப்பட்ட காட்சி வலைத்தளங்களில் வைரலாக,  அந்தப் பாகன் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளானார். அதனைத் தொடர்ந்து, வெப்பமான சூழலில் பராமரிக்கப்பட்டு வந்த யானை சுதந்திரமாகச் செயல்படும் விதத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலுள்ள கிருஷ்ணன் கோவில் ஏரியாவில், தனியாகக் கொட்டகை அமைத்து பராமரித்து வருகின்றனர். தற்போது 10 பெரிய ஷவர்களை அமைத்து யானையைக் குளிப்பாட்டுகின்றனர். அங்கு ராட்சத மின்விசிறியில் இருந்து விசிறப்படும் காற்று யானையை உற்சாகமாக வைத்திருக்கிறது.

 

காடுகளில் அதிக தூரம் நடந்து பழக்கப்பட்ட யானையை, கோவில் அருகிலேயே பராமரிப்பதைக் காட்டிலும், சற்று தூரத்திலுள்ள கிருஷ்ணன் கோவில் ஏரியாவில் பராமரித்து வருவதால், யானை தினமும் சில கிலோமீட்டர் தூரமாவது நடக்கிறது. இதன்மூலம்,  யானையின் ஆரோக்கியத்திற்கு ஒரு குறையும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்கின்றனர்.

 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வரும் பக்தர்களை குஷிப்படுத்தும் யானையை, குஷி மூடிலேயே வைத்திருப்பது நல்லதுதான்!

 

படம்: மிஸ்டர் பெல் 

 

 

 

 

Next Story

தண்ணீரில் விளையாடி மகிழ்ந்த ஸ்ரீரங்கம் கோயில் யானைகள் (படங்கள்)

Published on 25/10/2021 | Edited on 25/10/2021

 

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் யானைகளான ஆண்டாள் மற்றும் லட்சுமி இரண்டும் குளிப்பதற்காக ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பஞ்சக்கரை சாலையில் கோயிலுக்கு சொந்தமான ‘உடையவர் தோப்பில்’ 56 அடி நீளம் 56 அடி அகலம், 6.5 அடி உயரத்தில் 3 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட புதிய நீச்சல் குளம் கட்டப்பட்டது. அந்தக் குளத்திற்கு கோயில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் சிறப்பு பூஜை செய்தார். பின்பு கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையில் ஆண்டாள், லட்சுமி ஆகிய இரண்டு யானைகளும் முதன்முறையாக அந்தக் குளத்தில் இறக்கப்பட்டன. தண்ணீரில் இறங்கிய இரண்டு யானைகளும் ஒன்றோடு ஒன்று விளையாடி குஷியாகின.