![The public together disposed of the rainwater!](http://image.nakkheeran.in/cdn/farfuture/5gtyUg0idksV20wEoCqQ72Jwho046LZMpoo_x2tzx7s/1636801828/sites/default/files/2021-11/th_10.jpg)
![The public together disposed of the rainwater!](http://image.nakkheeran.in/cdn/farfuture/lNLoAxakxIBZ5XhIpI04bgndoCfS675ECWXY3VXkXWQ/1636801828/sites/default/files/2021-11/th-7_2.jpg)
![The public together disposed of the rainwater!](http://image.nakkheeran.in/cdn/farfuture/5aiGywlBJkBeHLFFIwq3pw20whXt_asturoFA1AkHnE/1636801828/sites/default/files/2021-11/th-3_10.jpg)
![The public together disposed of the rainwater!](http://image.nakkheeran.in/cdn/farfuture/wNCS0DjcYpNldJ_1wqrmCq6ucIBN2I_Hxb2VuvDENjM/1636801828/sites/default/files/2021-11/th-4_11.jpg)
![The public together disposed of the rainwater!](http://image.nakkheeran.in/cdn/farfuture/AgDAd0szxjGRTiyhz_7CX7l-rvqZCxci4kepMbZveKw/1636801828/sites/default/files/2021-11/th-2_11.jpg)
![The public together disposed of the rainwater!](http://image.nakkheeran.in/cdn/farfuture/p1JKQYwxNhgYKcP6FFI5_qVz_DQv6Q_QkvZGOdCleo0/1636801828/sites/default/files/2021-11/th-1_12.jpg)
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக கடந்த 11ஆம் தேதி வரை பெரும் மழை பெய்தது. இதனால், சென்னையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, பல்வேறு குடியிருப்புகளிலும் மழை நீர் சூழ்ந்தது. இதனால், பல பகுதிகளில் மக்கள் கடும் அவதிக்குள்ளானர். மழை நின்று இரண்டு நாட்களாகியும் சென்னையில் சில இடங்களில் தண்ணீர் வடியவில்லை.
அதனால், மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படியும் இன்னும் பல்வேறு இடங்களில் மழை நீர் அப்புறப்படுத்தாமல் உள்ளது. இந்நிலையில் சென்னை, மேற்கு மாம்பலத்தில் பி.ஆர்.பி. குடியிருப்பு வளாகத்தில் தேங்கிய மழை நீரை குடியிருப்புவாசிகள் மோட்டார் மூலம் வெளியேற்றினர். அதேபோல், மேற்கு மாம்பலம் ஈஸ்வரன் கோவில் தெருவில் சாலையில் தேங்கிய மழைநீரால் அப்பகுதியில் குடியிருப்பவர்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.