வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாழையாத்தம் முதல் சேம்பள்ளி கூட்ரோடு வரை ரூ.43.89கோடி மதிப்பீட்டில் புதிய சாலையும் கவுண்டன்யா மகாநதி ஆற்றின் குறுக்கே சந்தப்பேட்டை கோபாலபுரம் இணைக்கும் உயர் பாலம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு தினங்களுக்கு முன்பு கடந்த வெள்ளிக்கிழமை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மா.செ மற்றும் எம்.எல்.ஏ நந்தகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு திறந்து வைக்கப்பட்டது.
அமைச்சர் துரைமுருகன் மற்றும் ஆளும்கட்சி பிரமுகர்கள், உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்காக நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் சாலைகளின் பேனர்கள் வைக்கப்பட்டும், நிகழ்ச்சிக்காக சாலையை ஆக்கிரமித்து பந்தல் அமைக்கப்பட்டது.
விழா முடிந்து இரண்டு நாட்கள் ஆகியும் சாலையின் குறுக்கே உள்ள தூண்களை அகற்றப்படாமல் இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனங்கள் சென்று விபத்துக்கள் போன்ற அசம்பாவிதம் ஏற்படும் நிலையில் உள்ளது. விபத்து நடக்கும் முன்பு இதனை அகற்ற வேண்டும் எனவும் போக்குவரத்து போலீசார் மற்றும் குடியாத்தம் நகரக் காவல் துறையினர் சாலை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட பந்தல் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.