Skip to main content

தரமற்ற உணவு - கண்டுகொள்ளாத அதிகாரிகள்

Published on 18/08/2022 | Edited on 18/08/2022

 

ff

 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே பிரபலமான அசைவ உணவகம் ஒன்று இயங்கிவருகிறது. இந்த உணவகத்தில் கடந்த 16ஆம் தேதி மதியம் மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சாப்பிட்டுள்ளார். அவர் சாப்பிட்ட காடை கறியில் புழு இருந்திருக்கிறது. இதை அங்கு வேலை செய்யும் சப்ளை ஊழியர்களிடம் அவர் சொல்லியுள்ளார். அதற்கு அவர்கள் முறையாக பதில் சொல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் வாடிக்கையாளருக்கும் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

 

அவர் இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு போன் மூலம் இந்தத் தகவலை கூறியுள்ளார். அதற்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் புகாராக தந்தால் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளனர். அதன்பின் அவர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதேசமயம் உணவக நிர்வாகம், தங்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் புகார் சொன்னவரிடம் சமாதானம் பேசி புகார் தராமல் பார்த்துக்கொண்டுள்ளனர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட தொலைக்காட்சி, பத்திரிகை செய்தியாளர்களை உணவக நிர்வாகத்தின் சார்பில் சிலர் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. 

 

ஆரணி பகுதியில் தரமற்ற அசைவத்தில் சமைத்த உணவை விற்பனை செய்து இரண்டு குழந்தைகள் இறந்துள்ளனர். இது தொடர்பாக இரண்டு பிரியாணி ஓட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது பிரபலமான மற்றொரு ஹோட்டலில் புழு உள்ள உணவு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

தரமற்ற உணவுகளைத் தயாரிக்கும் ஓட்டல் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்