பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், புகார் அளித்தவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும், இதில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் முன்பு வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தை ஒருங்கிணைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் பார்வேந்தன் கூறுகையில், முதன் முதலாக இந்த சம்பவத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த நக்கீரனுக்கு எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். பெண்கள் பாதிக்கப்பட்டால் தமிழக முழுவதும் பா.ஜ.க. கொதித்து எழும் என்று கூறிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை, தற்போது வாய் மூடி மவுனமாக இருக்கிறார்.
ஆளும்கட்சியை சேர்ந்த பிரமுகர்களை காப்பாத்துவதற்காக ஆளும்கட்சினர் போலீஸிடமே பேரம் பேசுகிறார்கள். அதற்கு போலீஸ் உடந்தையாக இருக்கிறது. 200 பெண்களின் மானத்தை காப்பாற்ற தவறிய இந்த நாட்டின் முதலமைச்சர் பதவி விலக வேண்டும். இந்த விவகாரத்தில் பெண் நீதிபதியை நியமித்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் ரகசியமாக தகவலை சொல்லிவிட்டு போகலாம் என்றார்.
இந்த விவகாரத்தல் பாதிக்கப்பட்டவர்களின் பெயரை சொல்லக்கூடாது. ஆனால் காவல்துறை எஸ்.பி. பெயரை சொல்லியிருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.