திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஓய்வு பெற்ற காவலர்கள் நலச்சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஏப்ரல் 9ந்தேதி காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட முன்னால் காவல்துறை அதிகாரிகள், ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசாங்கம்மே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் வரும் ஜீலை 1ந்தேதி முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. 2022 ஜீன் 30ந்தேதி வரையென 4 ஆண்டுகளுக்கு காப்பீட்டு வசதியுள்ளது. இந்த காப்பீட்டு வசதி 5 லட்சமாகவும், கேன்சர், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான காப்பீடு 7.5 லட்சமாக உயர்த்த வேண்டும்மென கேட்டும், அனைத்து மருத்துவமனைகளிலும் ஓய்வு பெற்ற காவலர்களுக்கு பணம்மில்லா சிகிச்சை அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்து கோஷம்மிட்டனர். பின்னர் அதுப்பற்றிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.
இந்த போராட்டத்துக்கு தற்போது ஓய்வு பெற்றுவிட்ட முன்னால் ஏ.டி.எஸ்.பி, டி.எஸ்.பிகள் சிலர், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐக்கள் என 50க்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்துயிருந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் பணியில் இருந்தபோது, இவர்களை பார்த்தால் கீழ்நிலை அதிகாரிகள் பயப்படுவார்கள். தற்போது ஓய்வு பெற்ற நிலையில் அவர்கள் சங்கம் ஆரம்பித்து ஆர்ப்பாட்டம் செய்ய தற்போது பணியில் உள்ள இன்று டூட்டியில் இருந்த அதிகாரிகள் யாரும் அதை கண்டுக்கொள்ளக்கூடயில்லை. மற்ற போராட்டங்களைப்போல அலட்சியமாக பார்த்தனர்.
பதவியில் இருக்கும்போது, மற்றவர்கள் போராட்டம் நடத்துவதை இப்படித்தான் ( தற்போது காவல்துறையில் உள்ளவர்களை பார்த்து ) நாங்கள் கூட அலட்சியமாக பார்த்தோம், விரட்டினோம். ஓய்வு பெற்றுவிட்ட பிறகு தான், உரிமைக்காக, கோரிக்கைக்காக இந்த அரசாங்கத்திடம் எப்படி கெஞ்ச வேண்டியிருக்கிறது என்பதை புரிந்துக்கொண்டோம் என புலம்பினார் அந்த முன்னால் அதிகாரி ஒருவர்.