


Published on 10/05/2022 | Edited on 10/05/2022
சென்னை ஆர்.ஏ. புரம் கோவிந்தசாமி நகர், பகுதியில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி ஆக்கிரமிப்பு வீடுகளை அரசு அகற்றிவருகிறது. இந்நிலையில், பாமகவின் மாநில செயற்குழு உறுப்பினர் வி.ஜி.கண்ணையன்(60) வீடுகள் அகற்றப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து தீக்குளித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உடலுக்கு பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அஞ்சலி செலுத்தினார்.