Published on 12/05/2021 | Edited on 12/05/2021

பெட்ரோல் விலை ரூ. 93.84 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் ரூ. 87.49-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை 5 மாநில தேர்தல்களை முன்னிட்டு சில வாரங்களாக விலை உயர்த்தப்படாமல் தொடர்ந்து ஒரே விலையிலேயே இருந்துவந்தது.
இந்நிலையில், தேர்தல் முடிவடைந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்த்தப்பட்டு வந்தது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகளும், டீசல் விலை 24 காசுகளும் விலை உயர்த்தப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் விலை விரைவில் 100ஐ நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று அச்சத்தோடு பெட்ரோல் விலை உயர்வைக் கவனித்து வருகிறார்கள்.