Published on 25/02/2021 | Edited on 25/02/2021

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும் அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று வரும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் விரைந்து நலன் பெற்று மக்கள் தொண்டினைத் தொடர விழைகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.