Skip to main content

கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட கிராம மக்கள்... எதற்காக தெரியுமா..?

Published on 16/08/2019 | Edited on 16/08/2019


தென் மாநிலங்களை ஒப்பிடுகையில் வடமாநிலங்களில் அதிக அளவில் திருவிழாக்கள் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சம்பவாட் பகுதியில் வித்தியாசமான ஒரு திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. பக்வால் மேளா எனப்படும் இந்த திருவிழாவில் மக்கள் இரு அணியாக பிரிந்து கொண்டு கற்களை வைத்து ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொள்கின்றனர். அப்படி தாக்கிக் கொள்வதால் நிலத்தில் சிந்தும் ரத்தம், கடவுளுக்கு அளிக்கும் காணிக்கை என நம்பப்படுகிறது.
 

g



இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற பக்வால் மேளா திருவிழாவில் சுமார் 100 பேருக்கு காயம்பட்டதாக கூறப்படுகிறது. கற்களை பயன்படுத்தி தாக்கிக்கொள்ள கூடாது என அம்மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் மக்கள் இந்த திருவிழாவை கொண்டாடியிருக்கிறார்கள்.
 

 

சார்ந்த செய்திகள்