ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திருவாருர் மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் அதிகமான இடங்களில் மக்கள் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலளர் இரா.முத்தரசன் கடந்த 5 நாட்களுக்கு முன்பு, ”மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றுகிற ஒன்றிய பாஜக அரசை கண்டித்து வருகிற 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரம், மற்றும் கிராமங்கள் தோறும் மக்கள் நாடாளுமன்ற கூட்டம் நடத்தபடும்” என அறிவித்திருந்தார்.
அதனை ஏற்று திருவாரூர் மாவட்டம் முழுவதும் 100க்கும் அதிகமான ஊர்களில் மக்கள் நாடாளுமன்ற கூட்டத்தை துவங்கி கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக மன்னார்குடியில் நடைபெற்ற மக்கள் நாடாளுமன்ற கூட்டம் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வை. சிவபுண்ணியம் தலைமையில் நடைபெற்றது. அதில் விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். மோட்டார் வாகன திருத்த மசோதவை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.