Skip to main content

திமுக பொருளாளர் நடத்திய சமாதானப் படலம்: மா.செ பதவி மாறுமா? மாறாதா? - குழப்பத்தில் நிர்வாகிகள்

Published on 29/09/2018 | Edited on 29/09/2018
ve

 

வேலூர் மாவட்டத்தை திமுக 3 மாவட்ட பிரிவுகளாக பிரித்து நிர்வாகிகளை நியமித்து பணியாற்றி வருகிறது. வேலூர் கிழக்கு மாவட்டத்தின் மாவட்ட செயலாளராக இராணிப்பேட்டை எம்எல்ஏ காந்தியும், மத்திய மாவட்ட செயலாளராக அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமாரும், மேற்கு மாவட்ட செயலாளராக ஜோலார்பேட்டை முத்தமிழ்ச்செல்வியும் உள்ளனர்.

 

கிழக்கு மத்திய மாவட்டங்களை விட மேற்கு மாவட்டத்தில் அதிக அளவில் உள்கட்சி பிரச்சினைகள் உள்ளன. 2016 சட்டமன்ற தேர்தலின் போது அப்போதைய மாவட்ட செயலாளர் தேவராஜ், வாணியம்பாடி தொகுதியில் எம்எல்ஏ சீட் கேட்டார். அந்தத் தொகுதியை திமுக தலைமை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிவிட்டார். இதனால் மா.செவாக இருந்த தேவராஜ் சரியாக சரியாக தேர்தல் வேலை செய்யவில்லை இதனால் கூட்டணி கட்சி அந்த தொகுதியில் தோற்றுப்போனது. இதுப்பற்றி முஸ்லிம் லீக் திமுக தலைவரிடம் புகார் சொல்ல அதன் அடிப்படையில் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து தேவராஜ் மாற்றப்பட்டு புதிய மாவட்ட செயலாளர் பொறுப்பில் முத்தமிழ்செல்வி நியமிக்கப்பட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மாவட்ட செயலாளர் பதவியில் செயல்பட்டு வந்தவர் கட்சி பணிகளை சரியாக செய்யவில்லை என அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது.

 

v d

 

இதுபற்றி திமுகவின் புதிய பொருளாதார துரைமுருகனிடம் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சில நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து திமுக மேலிடம் செல்வியை மாற்ற முடிவு செய்தது. புதிய மாவட்ட செயலாளராக மீண்டும் தேவராஜ் நியமிக்கலாம் என சில மேல்மட்ட நிர்வாகிகள் முடிவு செய்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியான திருப்பத்தூர் வாணியம்பாடி ஆம்பூர் நகர கழக நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் சில தினங்களுக்கு முன்பு கழக பொருளாளர் துரைமுருகன் மற்றும் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராகவும் தற்போது கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ள காந்தி எம்எல்ஏவை அவர்களது இல்லத்தில் சந்தித்து மீண்டும் தேவராஜ்ஜை பதவியில் நியமிக்க கூடாது என மனு தந்து விட்டு வந்தனர்.

 

இது கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர்களுக்கான கலந்தாலோசனை கூட்டம் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் செப்டம்பர் 28ஆம் தேதி காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் கிழக்கு மாவட்ட செயலாளர் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

அதுப்பற்றி நம்மிடம் பேசிய நிர்வாகிகள் சிலர், யார், யார் என்ன தவறு செய்திங்க என்று எங்களுக்கு தெரியும். அதெல்லாம் மன்னிச்சிட்டோம், இனி ஒழுங்கா இருக்கனும் அப்படின்னு பேசினார். அவரே, தலைமை ஒரு மா.செவை நியமிக்குதுன்னா அதை ஏத்துக்கனும், எதிர்த்தா என்ன அர்த்தம் எனக்கேட்டு பேசியுள்ளார். அதோடு, கட்சி துரோகம் செய்தவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அவரது இந்த பேச்சு மீண்டும் எங்கு தேவராஜ்யை நியமித்துவிடுவார்களோ என்கிற பயத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள் தேவராஜை எதிர்ப்பவர்கள். அவர்களே ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் அவரை நியமிக்க முடியாது என்கிறார்கள். 

 

சமாதானத்துக்காக கூட்டப்பட்ட செயற்குழு கூட்டம் சமாதானத்துக்கு பதில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்த திமுக பிரமுகர்கள்.

 

 


 

சார்ந்த செய்திகள்