நேற்று 106 நாட்கள் சிறைவாசத்துக்கு பின் திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் இன்று தற்போது டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம்,
நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்திய பொருளாதாரம் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளை பாஜக அரசால் இன்னும் யூகிக்க முடியவில்லை. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி பயங்கரவாதம் ஆகிய மோசமான முடிவுகளால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதார விவகாரங்களை குறித்து மோடி பேசுவதே இல்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதத்தில் இருந்து அடுத்தடுத்த காலாண்டுகளில் 5.5 சதவிகிதமாக குறைந்துவிட்டது. உற்பத்தி, சிறுகுறு தொழில், கட்டமைப்பு உள்ளிட்ட எல்லா துறைகளிலும் வீழ்ச்சியே நீடிக்கிறது. நல்ல நாள் வரும் என்ற பாஜகவின் வாக்குறுதியின் முடிவே இந்த நிலையை ஏற்படுத்தியிருக்கிறது என்றார்.