Skip to main content

ஒத்த கால்ல நிக்கிறோம் ... மொத்த தொகுதிலயும் ! நடிகர் பார்த்திபன் டிவீட் !

Published on 02/04/2019 | Edited on 02/04/2019

பிரபல நடிகரும் , இயக்குனருமான பார்த்திபன் நேற்று காலை (01/04/2019) தனது டிவிட்டர் பக்கத்தில்  நான் தேர்தலில் ஆதரிக்கப் போகும் சின்னத்தை இன்று மாலை 6.00 மணியளவில் வெளியிடுகிறேன் என்று கூறினார். இந்நிலையில் திரையுலகினர் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். நடிகர் பார்த்திபன் அரசியலுக்கு வருகிறாரா ? என்ற கேள்வியும் எழத்தொடங்கியது. இந்நிலையில் நேற்று மாலை சரியாக 6.00 மணியளவில் நடிகர் பார்த்திபன் "ஒத்த கால்ல நிக்கிறோம்".... "மொத்த தொகுதிலயும்" ! என ஒற்றை கால் செருப்பு படத்துடன் , இதன் அளவு 7 என குறிப்பிட்டு புகைப்படத்தை வெளியிட்டார். 

 

parthiban



இந்த சின்னத்திற்கு வாக்களிப்பீர் என்ற சொல் இடம் பெற்றது. இதற்கு என்ன அர்த்தம் என்று டிவிட்டர் பயன்படுத்துவோர்கள் , அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்ந்து சிந்தித்து கொண்டு இருந்தனர். இந்நிலையில் நடிகர் பார்த்திபன் அவர்கள் மீண்டும் ஒரு டிவீட் செய்தார். அதில் தனது தெளிவான விளக்கத்தை அளித்திருந்தார். இதில் அவர் கூறியதாவது. 'ஒத்த செருப்பு S7' , இந்த தேர்தல் பரப்பரப்பை பயன்படுத்திக்கிற
யுக்தி ! நான் ஆதரிக்க போகும் அல்ல . நான் ஆதரவை தேடும் சின்னம் . விரைவில் இப்படத்தின் ஒத்த சிறப்பு , மத்த சிறப்பு & ஒட்டு மொத்த சிறப்பு-யாவும் வெளியிடுவேன் என கூறிய பார்த்திபன் தனது திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இப்படத்தின் பெயர் "ஒத்த செருப்பு Size 7" ஆகும்.


பி.சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்