தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழக அரசியல் கட்சிகள் பிரச்சாரம், கூட்டணி பேச்சுவார்த்தை ஆகிய பணிகளில் தீவிரமாக இயங்கி வருகிறது. அண்மையில் தமிழகம் வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மதுரையில் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில் பிப்ரவரி 14 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாக கடந்த மாதம் 31 தேதி தகவல்கள் வெளியாகி இருந்தன. அண்மையில் டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்த நிலையில், பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியது. மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியிருந்தது.
அண்மையில் இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் பல இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் பிப்.14 தமிழகம் வரும் பிரதமர் மோடியும் பிரச்சாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிப்.14 காலை 7.50 க்கு புறப்பட்டு 10.35 க்கு சென்னை வரும் பிரதமர், மூன்று மணி நேரம் மட்டுமே சென்னையில் இருப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.