Published on 22/01/2019 | Edited on 22/01/2019
மாவட்டக் கருவூலத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை மென்பொருள் பயன்பாட்டுத்திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தொடங்கிவைத்தார்.
"நாகை மாவட்டத்தில் 468 பணம் பெற்று வழங்கும் அலுவலர்களின் கீழ் உள்ள 19354 அரசுப் பணியாளர்கள் பணிப்பதிவேடுகள் மற்றும் ஊதியம் ஆகியவை தொடர்பான சேவைகளை விரைவாக பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக அரசின் நிகழ்நேர வரவு மற்றும் செலவுகளை உடனடியாகவும், இதர விவரங்களை எளிமையாகவும் பெறுவதோடு, அரசின் நிர்வாகமும் மேம்படும்". என்றார் ஆட்சியர் சுரேஷ்குமார். இந்நிகழ்ச்சியில் அத்துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.