கடலூரில் நேற்று நடைபெற்ற ஒரு திருமண விழாவில் மணமக்களுக்கு அவர்களின் நண்பர்கள் 'வெங்காய பொக்கே'யை பரிசாக கொடுத்து கலாய்த்துள்ளனர்.
![onion bookey gifted to new couple in Cuddalore](http://image.nakkheeran.in/cdn/farfuture/UEJfv74EAPcHbvS2BWO1wdEMG1YwR_ielOYhHwev9XQ/1575872954/sites/default/files/inline-images/1_220.jpg)
தற்போதைய சூழலில் வெங்காயத்தின் விலையைக் கேட்டாலே குடும்பத்தலைவர்கள், தலைவிகளுக்கு கண்களிலிருந்து கண்ணீர் வந்து விடும். அந்த அளவுக்கு வெங்காயத்தின் விலை ஒவ்வொரு நாளும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள திருமண மண்டபத்தில் முஸ்லிம் ஜோடிக்கு நேற்று காலை திருமணம் நடந்தது. விழாவில் உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டு புதுமண தம்பதிகளுக்கு பரிசு பொருட்களை வழங்கி வாழ்த்தினர். அப்போது மணமக்களை வாழ்த்த வந்த அவர்களின் நண்பர்கள் சிலர் புதுமண தம்பதிக்கு வெங்காய பொக்கே பரிசாக வழங்கினர். அதை மணமக்கள் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த படியே வாங்கிக் கொண்டனர். விழாவுக்கு வந்தவர்களும் புதுமன தம்பதிகளுக்கு வெங்காய பொக்கேயை வழங்கியதை வியப்புடன் பார்த்தனர்.