Skip to main content

5 வருசமா குடிக்க தண்ணி வரல.. கேட்டா.. மூத்தரமே வரலன்னு செயலர் சொல்றார்.. வெகுண்ட மக்கள் சாலை மறியல்!

Published on 10/04/2018 | Edited on 10/04/2018
water


புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீரமங்கலம் அருகில் உள்ள லெட்சுமி நரசிம்மபுரம் ஊராட்சி அணவயல் புளிச்சங்காடு கிராமத்திற்கு கடந்த 5 ஆண்டுகளாக நிலவும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க கோரி மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள அணவயல் எல்என்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட புளிச்சங்காடு கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்ப மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த மக்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறுப்படுகிறது. இது குறித்து சம்மந்தபட்ட ஊராட்சி நிர்வாகத்தில் ஊராட்சி செயலரிடம் பலமுறை முறையிட்டும் முறையான பதில் இல்லை.. மேலும் மூத்தரமே வரலயாம் குடி தண்ணீர் எப்படி வரும் என்று ஏலனமாக பேசுகிறார் என்று மக்கள் வெகுண்டனர்.

இதனால் குடிநீருக்காக தினமும் பல இடங்களுக்கு அலைய வேண்டியுள்ளதால் ஆத்திரமடைந்த மக்கள் இன்று அணவயலில் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்குவந்த வடகாடு காவல் ஆய்வாளர் பாஸ்கரன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது சாலை மறியல் போராட்டத்தால் மாணவர்களின் தேர்வு பாதிக்கக் கூடாது என்றார். உடனே சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க சாலை மறியலை கைவிட்டு இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வரை சாலை ஓரம் காத்திருப்பதாக கூறி சாலையோரம் அமர்ந்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்