Skip to main content

பகத்சிங்கை தூக்கில் போட்டவரின் பேரன்தான் நிர்பயா கொலை குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கில் போடும் ஹேங்மேன்

Published on 08/01/2020 | Edited on 08/01/2020
n


நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேரும் 22-ந்தேதிக்குள் தூக்கில் போடப்பட வேண்டும் என்று டெல்லி கோர்ட் உத்தரவிட்டதை அடுத்து அதற்கான ஏற்பாடுகள் திகார் சிறையில் நடந்து வருகின்றன. 4 பேரையும் தூக்கில் போடுபவர் பவான் ஜலாத்.

 

கைதிகளை தூக்கில் போடுவதற்கு என்று தனியாக எந்த சிறையிலும் ஊழியர்கள் நிரந்தரமாக இல்லை. இதற்கென தற்காலிக ஊழியர்களை அந்த நேரத்தில் மட்டும் அழைத்து கொள்வது வழக்கம். சிலர் பரம்பரையாக இந்த பணியில் இருக்கிறார்கள். அவர்களைத்தான் இதில் ஈடுபடுத்துவார்கள்.

 

உத்தரபிரதேசம் மீரட் சிறையில் பவான் ஜலாத்  குடும்பத்தினர் 4 தலைமுறையாக தூக்கு தண்டனையை நிறைவேற்றும் ஊழியர்களாக பணியாற்றி வந்துள்ளனர். சுதந்திர போராட்ட வீரர்களான பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகியோரை லாகூர் சிறையில் தூக்கில் போடப்பட்டவர்  பவான் ஜலாத்தின் தாத்தா.

 

மீரட்டில் பவான் ஜலாத் சைக்கிளில் பெட்ஷீட் வியாபாரம் செய்து வருகிறார். இவர் 4 குற்றவாளிகளையும் தூக்கில் போட தயாராக இருக்கிறார்.  பவான் ஜலாத் இதுவரை யாரையும் தூக்கில் போட்டது இல்லை.  இதுவே முதல்முறை.  
 

சார்ந்த செய்திகள்