என்.எல்.சி விபத்து தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையத்தில், நாம் தமிழர் கட்சி உறுப்பினர் ஏகாட்டூர் சரவணன் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 5 விபத்துகள் நடந்துள்ளன. ஒரு அலகை 30 ஆண்டுகளுக்கு பயன்படுத்திவிட்டு, பின்னர் முறையாகப் பராமரித்தால் 10 முதல் 20 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும். ஆனால், முறையான பராமரிப்பு இல்லாமல், 30 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட கால இடைவெளியிலான பாதுகாப்பு தணிக்கையை முறையாக நடத்தாமல், மனிதனால் உருவாக்கப்படும் இதுபோன்ற விபத்துகளுக்கு காரணமான என்.எல்.சி. நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, விபத்து மற்றும் ஊழியர்கள் பலி குறித்து, ஆகஸ்ட் 4- ஆம் தேதிக்குள் என்.எல்.சி. தலைமை மேலாண் இயக்குநர், தமிழக தொழிலாளர் நல ஆணையர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.