Skip to main content

"காவிரி டெல்டாவில் புதிய பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களை......"- தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

Published on 31/10/2021 | Edited on 31/10/2021

 

"New petrochemical companies in the Cauvery Delta ......" - TTV Dinakaran urges the Tamil Nadu government!

அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (31/10/2021) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "காவிரி டெல்டாவில் புதிய பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களை உருவாக்குவதற்கான ஏல அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

 

எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயத்திற்கு ஆதரவானவர்கள் போல காட்டிக்கொண்டு வசனம் பேசுவதையும், ஆட்சிக்கு வந்ததும் விவசாயத்திற்கு எதிரான (ஹைட்ரோ கார்பன் போன்ற) திட்டத்திற்கு கையெழுத்து போடுவதையும் தி.மு.க வாடிக்கையாக வைத்திருக்கிறது.

 

அந்த வரிசையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களை உருவாக்குவதற்கான அறிவிப்பை தி.மு.க அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

 

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இப்பிரச்னையில் கொண்டிருந்த நிலைப்பாட்டையே, முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின் செயல்படுத்த வேண்டும். 

 

மேலும் இதுபோன்ற சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வு காண பாதுகாக்கப்பட்ட வேளாண்  மண்டல சட்டத்தில் உள்ள குறைகளைச்  சரி செய்து சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்." இவ்வாறு அவர் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்