10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாததால் அழகியபாண்டியபுரத்தை சேர்ந்த மாணவர் சுடுகாட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் அழகியபாண்டியபுரத்தை சேர்ந்த மாணவர் சுரேந்தர் (18) . இவருக்கு தந்தை கிடையாது. அவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார். தனது தாயார் மற்றும் சகோதரியுடன் மகாராஜநகர் ஹவுசிங் போர்டு பகுதியில் குடியிருந்து வந்தார். தாயார் பாளை சித்த மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் 10ஆம் வகுப்பு பொது தேர்வு ரிசல்ட் திங்களன்று வெளியானது. இதில் தனியார் டுட்டோரியல் ஒன்றில் படித்து வந்த மாணவன் சுரேந்தர் இந்த முறை தேர்ச்சி பெறாததால் விரக்தி அடைந்து திங்களன்று இரவில் தனது நண்பர் ஒருவரின் பைக்கை இரவல் வாங்கி கொண்டு நெல்லை சேந்திமங்கலம் ஆற்றங்கரை அருகே உள்ள சுடுகாட்டில் உள்ள மரத்தில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

காலையில் அங்குள்ள மக்கள் ஆற்றுக்கு குளிக்க செல்லும் போது மரத்தில் ஒரு உருவம் தூக்கில் தொங்குவதை பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர், தச்சநல்லூர் காவல்துறை மற்றும் வி.ஏ.ஓ. ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு தூக்கில் தொங்கிய மாணவரின் உடலை கீழே இறக்கி பிரேத பரிசோதனைக்கு பாளை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அதிகாலையில் மாணவர் ஒருவர் தூக்கில் தொங்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.