Skip to main content

ஆளுநர் உரையால் எந்த தாக்கமும் ஏற்படாது- மு.க.ஸ்டாலின் பேட்டி!

Published on 06/01/2020 | Edited on 06/01/2020

15- வது தமிழக சட்டப்பேரவையின் 8 ஆவது கூட்டத்தொடர் இன்று (06.01.2020) காலை 10.00 மணியளவில் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். 

tamilnadu assembly meeting governor speech avoid dmk party


இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேரவையில் பேச அனுமதிக்காத நிலையில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், "தமிழக ஆளுநர் உரையால் நாட்டில் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை. ஏதோ சடங்குக்காக, சம்பிரதாயத்திற்காக நடக்கும் ஆளுநர் உரையால் எந்த தாக்கமும் ஏற்படாது. தமிழக அரசு நீட் தேர்வில் இரட்டை வேடம், ஏழு பேர் விடுதலையில் எந்த முடிவும் இல்லை. இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

tamilnadu assembly meeting governor speech avoid dmk party


திமுகவை தொடர்ந்து டிடிவி. தினகரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரும் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். மேலும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 




 

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.