Skip to main content

“தொழிலாளர் விரோத சட்டங்கள் திரும்பப் பெற வேண்டும்” - பெ.சண்முகம்

Published on 10/05/2025 | Edited on 10/05/2025

 

Anti-labor laws should be withdrawn says P. Shanmugam

தொழிலாளர் விரோத சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டுமென தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் வேண்டும் என்று சி.பி.எம். மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தொழிலாளர் வர்க்கம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக போராடிப் பெற்ற உரிமைகளை, தொழிற்சங்க சடங்களை அடித்து நொறுக்கி மோடி அரசானது தற்போது முதலாளிகளுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் ஆதரவாக தொழிலாளர்களுக்கு விரோதமாக 4 தொகுப்புச் சட்டங்களாக மாற்றியுள்ளது. 

இச்சட்டங்கள் இன்னும் அமலாக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. இவற்றைத் திரும்பப் பெற வேண்டுமென தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்