






Published on 21/01/2022 | Edited on 21/01/2022
தைப்பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடும் நோக்கில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு இலவசமாக வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிந்தாதிரிப்பேட்டை சாமி பண்டாரம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வேட்டி, சேலை அடங்கிய பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. இதனை எம்.பி.தயாநிதி மாறன் பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், திமுக எம்.பி தயாநிதி மாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.