Skip to main content

வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டு தரக்கோரி தாய், மகள் ஆட்சியரிடம் மனு 

Published on 12/09/2022 | Edited on 12/09/2022

 

Mother, daughter appeal Collector seeking recovery husband abroad

 

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமை இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த தாய், மகள் ஆகியோர் வெளிநாட்டில் மர்மமாக இறந்த தனது கணவரின் உடலை மீட்டுத் தரக் கோரி மனு அளித்தனர்.

 

திருச்சி வடக்கு சித்தாம்பூர் காவேரி பாளையத்தை சேர்ந்தவர் சின்னமுத்து புரவியான்(52) இவரது மனைவி அன்னக்கிளி. இவர்களுக்கு 12 ஆம் வகுப்பு படித்து முடித்த மகள் ஒருவர் உள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக சின்னமுத்து வெளிநாடான சவுதியில் வெல்டர் வேலைக்காக சென்றவர் கடந்த புதன்கிழமை இரவு அன்று சின்னமுத்து தனது மனைவி அன்னக்கிளி மற்றும் மகளிடம் சவுதியில் இருந்து அலைபேசி மூலம் பேசியுள்ளார். அடுத்த நாள் மனைவி அன்னக்கிளி தனது கணவரிடம் பேச முற்பட்ட போது செல்போன் சுவிட்ச் ஆப்பாகி இருந்தது. அவரது நண்பரிடம் கேட்ட பொழுது உங்களின் கணவர் சவுதியில் காணாமல் போய் விட்டதாக தெரிவித்துள்ளனர்.

 

இந்நிலையில் நேற்று மதியம் சவுதியிலிருந்து பேசிய சிங்கமுத்துவின் நண்பர் உங்கள் கணவர்  சிகிச்சைக்காக அனுமதித்திருப்பதாக கூறினார். பிறகு மீண்டும் தொடர்பு கொண்டு கணவர் சின்னமுத்து இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். தனது கணவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். உரிய விசாரணை நடத்தி தனது கணவரின் உடலை மீட்டுத் தரக்கோரி அவரது மனைவி அன்னக்கிளி மற்றும் மகள் நிவேதா ஆகியோர் இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்