தமிழகத்தில் உள்துறை மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்கள் உள்ளிட்ட பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, வணிக வரித்துறை கமிஷனராக இருந்த பணீந்திர ரெட்டி- உள்துறை செயலாளர். உள்துறை செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர் - வருவாய் நிர்வாகத்துறை கமிஷனர். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் நசீமுதீன்- தொழிலாளர் நலன் மற்றும் தனித்திறன் மேம்பாடு துறை செயலாளர். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் - கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர்.
சென்னை மெட்ரோ ரயில் வாரிய மேலான் இயக்குநர் மற்றும் முதன்மை செயலாளர் இயக்குநர் பிரதீப் யாதவ் - நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளர். நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளர் தீரஜ் குமார் - வணிகவரித்துறை கமிஷனர்/முதன்மை செயலாளர். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில், சிறப்பு அதிகாரி/ முதன்மை செயலாளராக பணியாற்றிய செந்தில்குமார் - தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர்.
தமிழக விளையாட்டு ஆணைய முன்னாள் உறுப்பினர் செயலாளர் ஆனந்தகுமார் - மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர். தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் தாரேஷ் அகமது - ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கமிஷனர். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கமிஷனர் ஜெயகாந்தன் - புவியியல் மற்றும் கனிம வளத்துறை கமிஷனர். புவியியல் மற்றும் கனிம வளத்துறை இயக்குநர் நிர்மல் ராஜ் - போக்குவரத்து துறை கமிஷனர். வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை மற்றும் மறுகுடியமர்த்தல் துறை செயலாளர் ஜெசிந்தா லசாரஸ் - மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கமிஷனர்.
தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தர ராஜ் - வணிகவரித்துறை இணை கமிஷனர். தமிழக சிவில் சப்ளை கார்பரேசன் இணை மேலாண் இயக்குநர் சங்கீதா - வணிக வரித்துறை நிர்வாக கூடுதல் கமிஷனர். திருச்சி ஆட்சியர் சிவராசு - கோவை, வணிகவரித்துறை இணை கமிஷனர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர்த்துறை கமிஷனர் மதிவாணன் - மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கமிஷனர். மரியம் பல்லவி பல்தேவ் - தொழிற்சாலைகள் துறை கூடுதல் செயலாளர். மின்னணு நிர்வாகத்துறை இயக்குநர் விஜயேந்திர பாண்டியன் - கருவூலம் மற்றும் அக்கவுண்ட் துறை கமிஷனர்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் லாவ்லீனா- உணவுபாதுகாப்பு துறை கமிஷனர். ராமநாதபுரம் முன்னாள் கலெக்டர் சந்திரகலா - தொழில் முதலீடு கழக இயக்குநர். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத்துறை இணை செயலர் ஜான் லூயிஸ் - வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை இணை கமிஷனர். அருங்காட்சியக துறை இயக்குநர் ராமன் - வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரக அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை இயக்குநர். தட்கோ மேலாண் இயக்குநர் விவேகானந்தன் - மாநில தேர்தல் ஆணைய செயலாளர். சென்னை முன்னாள் ஆட்சியர் விஜயராணி - சேலம் பட்டுநூல் வளர்ப்பு கழக இயக்குநர். பால் உற்பத்தி மற்றும் பால் வளர்ச்சி கழக கமிஷனர் பிரகாஷ் - வரலாறு மற்றும் காப்பகங்கள் கமிஷனர்.
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சிறப்பு செயலாளர் பிங்கி ஜோயல் - பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை கமிஷனர். பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை கமிஷனர் கருணாகரன் - ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சிறப்பு செயலாளர். கருவூலத்துறை கமிஷனர் வெங்கடேஷ் - போக்குவரத்து துறை சிறப்பு செயலாளர். வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை இணை கமிஷனர் சீதா லெட்சுமி - சமூக நலன் மற்றும் பெண்கள் முன்னேற்றத்துறை இணை செயலாளர். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இயக்குநர் பிரவீன் நாயர் - மின்னணு நிர்வாகத்துறை இயக்குநர். தமிழக பாட புத்தகம் மற்றும் கல்வி சேவை கழக மேலாண் இயக்குநர் மணிகண்டன் - பள்ளிகல்வித்துறை இணை செயலாளர்.
வரலாறு மற்றும் காப்பகங்கள் துறை முதன்மை கமிஷனர் ஹர்சகாய் மீனா - திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை சிறப்பு செலயாளர். சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை துணை கமிஷனர் நரனவாரே மணிஷ் ஷங்கர்ராவ் - ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குநர். தமிழக குடிநர் சப்ளை மற்றும் கழிவுநீர்வாரிய இணை மேலாண் இயக்குநர் பிரதீப்குமார் - திருச்சி ஆட்சியர். சேலம், பட்டுநூல் வளர்ச்சித்துறை இயக்குநர் சாந்தி - தர்மபுரி ஆட்சியர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ் - ராமநாதபுரம் ஆட்சியர். வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணைய கமிஷனர் சித்திக் - சென்னை மெட்ரோ ரயில் கழக முதன்மை செயலாளர் மற்றும் மேலாண் இயக்குநர். சென்னை மெட்ரோபோலிட்டன் குடிநீர் சப்ளை மற்றும் கழிவுநீர் வாரிய முன்னாள் நிர்வாக இயக்குநர் ஆகாஷ் - தென்காசி ஆட்சியர் என இடமாறுதலும், பணிமாறுதலும் நடந்துள்ளது.