Skip to main content

'மீண்டும் மஞ்சப்பை' பொதுமக்களிடம் கொண்டுசெல்லும் எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் 

Published on 28/12/2021 | Edited on 28/12/2021

 

MLA Inigo Iruthayaraj   take cloth bag moment  to the public

 

பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள், பிரச்சாரங்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன. கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிளாஸ்டிக் பைகளை ஒழித்து மஞ்சப்பைகளைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். அதன்படி கடந்த 23ஆம் தேதி 'மீண்டும் மஞ்சப்பை' என்ற இயக்கத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்தார்.

 

அதனைத் தொடர்ந்து துணியாலான பை (மஞ்சப்பை) பயன்பாட்டை பரவலாக்க பல்வேறு தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அந்த வகையில், தற்போது திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் துணிப்பை பயன்பாட்டிற்கான விழுப்புணர்வை முன்னெடுத்து செல்ல ஆரம்பித்துள்ளார்.

 

வருகின்ற பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசால் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள அனைத்து பொருட்களும் மஞ்சள் பையில் வழங்குவதற்கான முதற்கட்ட ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. அதேபோல், திருச்சி கிழக்கு தொகுதி முழுவதும் எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ், பொதுமக்கள் அனைவரும் மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் என்ற பிரச்சாரத்தை பொதுமக்களிடம் நேரடியாக கொண்டு செல்வதாகவும் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எஸ்.எஸ்.ஐ. குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த அமைச்சர் மற்றும் ஆட்சியர்!

Published on 22/11/2021 | Edited on 22/11/2021

 

Minister and Collector consoled the late SSI family in person

 

திருச்சி நவல்பட்டு, எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் ஆடு திருடர்களை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தபோது கீரனுார் பள்ளத்துப்பட்டி மணி என்பவரால், விஜய் நகர் ரயில்வே பாலம் அருகில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரின் உடலானது துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

 

இந்த நிலையில், திருவெறும்பூர், நவல்பட்டு, சோழமாநகரில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, எஸ்எஸ்ஐ-யின் மனைவி கவிதா, மகன் குகன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். அப்போது முதல்வர் அறிவித்த 1 கோடி உதவித் தொகையானது விரைவில் உங்களுக்கு வழங்கப்படும் என அவர் குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.

 

Minister and Collector consoled the late SSI family in person

 

அவருடன் கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ், மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ கே.என். சேகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். அவரைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் வீட்டிற்குச் சென்று ஆறுதல் தெரிவித்தார். அப்போது அரசு அறிவித்தபடி உங்களது குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை அளிப்பது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக தெரிவித்தார்.

 

 

Next Story

ஆய்வுகளை மேற்கொண்டு கோரிக்கைகளை கேட்டறிந்த எம்.எல்.ஏ!

Published on 09/11/2021 | Edited on 09/11/2021

 

The MLA who listened to the demands

 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துவருகிறது. கடந்த  நான்கு தினங்களாகத் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்துவருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இந்த மழை பாதிப்பு தீவிரமாக இருந்துவருகிறது. குறிப்பாகச் சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

 

அதேபோல் இன்று உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, வரும் 11ஆம் தேதி வட தமிழ்நாட்டு கடற்கரையை நெருங்கும்,. இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் கனமழை காரணமாக பல மாவட்டங்களிலும் மக்கள் பெரிதும் சிரமத்தை சந்தித்துவருகின்றனர்.

 

The MLA who listened to the demands

 

இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட கொட்டப்பட்டு, புதுக்கோட்டை மெயின் ரோடு, ஜீவா தெரு, இந்திரா நகர், ஜே.கே. நகர், அமராவதி தெரு, சிந்து தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனை அறிந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், அப்பகுதியில் நேரில் ஆய்வு செய்து மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.  

 

இந்த ஆய்வின்போது நிர்வாக பொறியாளர் சிவபாதம், உதவி ஆணையர் தயாநிதி, உதவி செயற்பொறியாளர் பாலசுப்ரமணியம், உதவி பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி,  சுகாதார அலுவலர் தலை விரிச்சான், கலைஞர் நகர் பகுதி பொறுப்பாளர் மணிவேல், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.